Monday, October 20, 2014

Windows 8 Bootable USB Drive ஐ உருவாக்கல்



Windows 7, Windows 8 இயங்குதளங்களானது பொதுவாக DVD வடிவிலேயே கிடைப்பதுண்டு. கணணியிலே இயங்குதளத்தை நிறுவ வேண்டிய சந்தர்ப்பத்தில் அக் கணணியிலே DVD Drive இல்லாத சந்தர்ப்பங்களில் எவ்வாறு Windows 8USB Drive மூலமாகத் Bootable USB Drive ஆகத் தயாரிக்கலாம் என்று இப் பதிவினூடாகப் பார்ப்போம்.

இதற்காக ஒரு மென்பொருளை Microsoft தளத்திலிருந்து நேரடியாக இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம். அத்துடன் இதற்காக 4GB அல்லது அதற்கு கூடிய USB Drive ஐ பயன்படுத்தவேண்டும்.

இப்போ உங்கள் USB Drive ஐ செருகியபின்னர் தரவிரக்கிய மென்பொருளை இயக்கிக் கொள்ளவும். இப்போ கீழ் காட்டியவாறு தோன்றும்.




இதிலே Browse என்பதை கிளிக் பண்ணி Windows 8 மென்பொருளின் “ ISO File ” என்பதை தெரிவு செய்யவும். பின்னர் Next என்பதைக் கிளிக் பண்ணவும்.
இப்போ USB Device என்பதை தெரிவுசெய்யவும்.



இப்போ நீங்கள் பயன்படுத்தப் போகும் USB Device ஐ தெரிவு செய்யுங்கள். பின்னர் Begin copying என்பதை கிளிக் பண்ணவும்.



இப்போ உங்கள் USB Device ஆனது Format செய்யப்பட்டு Windows 8 Bootable USB Drive தயாரிக்கப்படும்.



இப்போ 100% முடிவடைந்து Bootable USB Drive ஆனது தயரிக்கப்பட்டுவிடும். 

இப்போ My Computer ஐத் திறந்து அதிலே காணப்படும் USB Drive இல் RightClick செய்து தோன்றும் நிரலில் உள்ள Eject என்பதைக் கிளிக் செய்து USB Drive பாதுகாப்பாக கழற்றிக்கொள்ளவும்.

இப்போ நீங்கள் DVD Drive இல்லாத கணனிகளில் Windows 8  இயங்குதளத்தை நிறுவுவதற்காக உங்கள் USB Drive ஐப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நண்றிகள்
http://alasalkal1000.blogspot.in

No comments:

Post a Comment

w3தமிழ் எழுதி