மைக்ரோசாப்ட் வோர்ட் பயன்பாட்டை நம்மில்
பலர் பல வருடங்களாக பயன்படுத்தி வருகிறோம். அவரவர் தேவைக்கு ஏற்றபடி,
வேர்டு டாக்குமெண்டில் புகைப்படங்கள் மற்றும் பிறப் படங்களை
டெக்ஸ்ட்களுக்கு இடையில் அங்காங்கே இணைத்திருப்போம். அவற்றில் பெரும்பாலான
படங்கள் அதனுடைய உண்மையான அளவிலிருந்து பெரிதாக்கியோ அல்லது சிறிதாக்கியோ
இணைக்கப்பட்டிருக்கும்.
இது போன்ற வேர்டு கோப்புகளில்
உள்ள படங்களை மட்டும் அதனுடைய உண்மையான அளவில் தனித்து திரும்ப பெற,
அவற்றில் உள்ள டெக்ஸ்ட்களை மட்டும் தனித்துப் பெற, இதில் எம்பெட்
செய்யப்பட்ட கோப்புகளை தனித்துப் பெற, மிக முக்கியமாக மேலே சொன்ன
அனைத்தையும் அந்த குறிப்பிட்ட வேர்டு கோப்பை திறக்காமல் செய்ய முடியுமா?
(வேர்டு 2007) எனில் முடியும். விளக்கத்தை மேலும் படியுங்கள்.