Showing posts with label தகவல். Show all posts
Showing posts with label தகவல். Show all posts

Friday, June 28, 2013

200 பயனுள்ள இணையதள முகவரிகள்

சான்றிதழ்கள்

1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta

2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta

3) வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0

4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/birth.pdf

http://www.tn.gov.in/appforms/death.pdf

5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-community.pdf

6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-income.pdf

Thursday, March 14, 2013

விண்டோஸ் 7 கணினியை எப்படி தமிழில் பயன்படுத்துவது

கணினி உலகம் மற்றும் இணையத்தில் ஒவ்வொரு நிறுவனமும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ளவும், அதிகமான வாசகர்களை பெறவும் நிறைய வசதிகளை அறிமுகம் செய்வது வழக்கம். அதில் முக்கியமாக தங்கள் படைப்புகளை குறிப்பிட்ட மொழிகளில் தந்து அதிக பயனர்களை பெறுவது.

இதுவரை கூகுள், பேஸ்புக் மற்றும் பல மென்பொருட்கள் அறிமுகமான கொஞ்ச வருடங்களிலேயே இந்த விசயத்தில் அடித்து ஆட, இவர்களுக்கெல்லாம் முன்னோடியான மைக்ரோசாப்ட் கொஞ்சம் தாமதமாக இந்த விஷயத்தை கையில் எடுத்து பல வசதிகளை அதன் பயனர்களுக்கு தந்துள்ளது.

அந்த வகையில் இன்றைய பதிவில் உங்கள் விண்டோஸ் 7 இயங்கு தளம் கொண்ட கணினியை எப்படி தமிழில் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

முதலில் இந்த இணைப்பில் (http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=a1a48de1-e264-48d6-8439-ab7139c9c14d&displaylang=ta) சென்று தமிழுக்கான விண்டோஸ் 7 மொழி இடைமுகத் தொகுப்பை (Lanugage Interface Pack - LIP) தரவிறக்கம் செய்யுங்கள். 32 பிட் அல்லது 64 பிட் ஏதேனும் ஒன்றை மட்டும். எது என்ற குழப்பத்தில் உள்ளவர்கள் 32 பிட்டை தரவிறக்கம் செய்யவும்.

உங்கள் கணினியில் தரவிறக்கம் ஆன பின்பு, அதை உங்கள் கணினியில் நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

Next என்பதை தெரிவு செய்து, பின் அடுத்து வரும் பகுதியில் I Accept the license terms என்பதை தெரிவு செய்து மீண்டும் ஒரு Next, அடுத்து மீண்டும் ஒரு Next, இப்போது தமிழ் மொழி உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகும்.

இன்ஸ்டால் ஆன பின் மீண்டும் Next என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது நீங்கள் Display மொழியை தெரிவு செய்ய வேண்டும். அதில் தமிழ் என்பதை தெரிவு செய்து "Apply display language to welcome screen and system accounts" என்பதை கிளிக் செய்து "Change Display Lanugage" என்பதை கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான் இப்போது உங்கள் கணினியை ஒரு முறை நீங்கள் Restart செய்ய வேண்டும்.

இனி உங்கள் கணினி தமிழில் இயங்க ஆரம்பிக்கும். அனைத்து வசதிகளும், செயல்களும் தமிழில் இல்லாவிட்டாலும் பொதுவான பல விஷயங்கள் தமிழில் இருக்கும்.

இனி ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட கணினியில் அடிப்படை விசயங்களை செய்ய முடியும்.

மீண்டும் ஆங்கிலத்துக்கு மாற: ஸ்டார்ட் மெனு >> கட்டுப்பாட்டுப் பலகம் >> காட்சி மொழியை மாற்றவும் என்பதை கிளிக் மாற்றலாம். இவ்வாறு வராதவர்கள் கட்டுப்பாட்டுப் பலகம் >> வட்டாரம் மற்றும் மொழி என்பதை கிளிக் செய்து வரும் சிறிய விண்டோவில் "விசைப்பலகைகளும் மொழிகளும்" என்கிற பகுதியில் காட்சி மொழி ஒன்றை தேர்வு செய்யவும் என்பதற்கு கீழே English என்பதை தெரிவு செய்யுங்கள்.

ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற (இன்ஸ்டால் செய்த பின்): Control Panel >> Change Display Language என்பதை கிளிக் மாற்றலாம். இவ்வாறு வராதவர்கள் Control Panel >> Region and Language என்பதை கிளிக் செய்து வரும் சிறிய விண்டோவில் Keyboards and Language என்பதில் Choose a Display Language கீழே தமிழை தெரிவு செய்து கொள்ளலாம்.

Hit "Like" in our page to show support!
https://www.facebook.com/WeAreBornToWin

Sunday, January 29, 2012

+2 தேர்வு அட்டவணை

தமிழக அரசு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது . மார்ச் 8 ல் துவங்கி 30 ல் முடிவடைகிறது.

தேர்வு அட்டவணை:

மார்ச் 8 - வியாழன் - மொழித்தாள் 1.
மார்ச் 9 - வெள்ளி - மொழித்தாள் 2.
மார்ச் 12 - திங்கள் - ஆங்கிலம் 1.
மார்ச் 13 - செவ்வாய் - ஆங்கிலம் 2.
மார்ச் 16 -வெள்ளி - இயற்பியல்,அளவியல் & பொருளியல்.

மார்ச் 19 - திங்கள் - கணிதம் & விலங்கியல்.
மார்ச் 20 - செவ்வாய் - புவியியல்,மனையியல் & வணிகயியல்.
மார்ச் 22 - வியாழன் - சுருக்கெழுத்து, வேதியியல் & கணக்கு பதிவியல்.
மார்ச் 26 - திங்கள் - உயிரியல், வரலாறு & தாவரவியல்.
மார்ச் 28 - புதன் - கணினி அறிவியல்.
மார்ச் 30 - வெள்ளி - புள்ளியியல்.
தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற வாழ்த்துக்கள்.

பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியான உடன் தகவலை குறுந்தகவல் மூலம் பெற உங்கள் மொபைலில் இருந்து ON SINDHIKKALAM என குறுதகவல் டைப் செய்து 09870807070 என்ற எண்ணிற்கு அணுப்பவும். இந்த சேவை முற்றிலும் இலவசமானது.

இந்தியாவின் இலவச தொலைபேசி எண்கள்

இந்தியாவி்ன் அனைத்து toll Free Phone Number களின் தொகுப்பு 
  •  Airlines
  • Indian Airlines                     - 1800 180 1407
  • Jet Airways                         - 1800 22 5522
  • Spice Jet                            - 1800 180 3333
  • Air India -                          - 1800 22 7722
  • Kingfisher                          - 1800 180 0101
  • ===================================
  • Banks
  • ABN AMRO                          - 1800 11 2224
  • Canara Bank                       - 1800 44 6000

Monday, August 1, 2011

தமிழாக்கம் செய்ய கூகிளின் புது வசதி

கூகிள் Translate பற்றிஅனைவரும் அறிந்திருப்பீர்கள். ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு கட்டுரைகளையோ, வலைத்தளங்களையோ மாற்ற உதவுகிறது. ஆனால் இதுவரை தமிழ் மொழிக்கு மாற்றும் வசதி இல்லை. தற்போது அதனையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆனால் தற்போது சோதனை முறையாகவே அறிமுகம் செய்துள்ளது. அதனால் சரியாக மொழிமாற்றம் செய்யவில்லை. பல ஆங்கில வார்த்தைகளை ஆங்கில வார்த்தைகளாகவே கொடுக்கிறது. அதே போல தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மாற்றினால் பல தமிழ் வார்த்தைகளை தமிழிஷ் [Tamil word in English] வார்த்தைகளாகவே கொடுக்கிறது.

மொழிமாற்றம் செய்ய:

http://translate.google.com/ தளத்திற்கு சென்று நீங்கள் டைப் செய்யுங்கள். நீங்கள் எந்த மொழியில் டைப் செய்தாலும் முடிந்தவரை அது தானியங்கியாக கண்டுபிடித்துவிடும். பிறகு மேலே TO என்ற இடத்தில் எந்த மொழிக்கு மாற்றம் செய்ய வேண்டுமோ, அதனை தேர்வு செய்யவும். பிறகு Translate என்பதை க்ளிக் செய்யவும்.

வலைத்தளங்களை மொழிமாற்றம் செய்ய:

வலைத்தளங்களை மொழிமாற்றம் செய்ய http://translate.google.com/ தளத்திற்கு சென்று  தளமுகவரியை (URL) கொடுத்து Enter கீயை அழுத்தவும்.

தமிழுடன் சேர்த்து வங்காளம், குஜராத்தி, தெலுங்கு, கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகள் தற்போது சோதனை முறையில் இருக்கின்றன. Google Translate Gadget-ல் இன்னும் இந்த வசதி வரவில்லை.

இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை காண : இங்கு க்ளிக் செய்யவும்.
நன்றி:bloggernanban.blogspot.com

Friday, February 18, 2011

Torrent ( டோரன்ட் )

கோப்பு பகிர்தலை எளிமையாக்கும் டோரன்ட் நுட்பம்
இணையத்தில் உலவுபவர்களுக்கு நல்ல பரிட்சயமான வார்த்தை 'டோரன்ட்'. பெரும்பாலான வீடியோ பகிர்ந்து கொள்ளும் தளங்களில் கோப்புகளை டோரன்ட் வடிவில் வழங்குவதை நீங்கள் கண்டிருக்கலாம். அந்த கோப்புகளை தரவிறக்கினால் அவை மிகச்சிறிய அளவிலேயே இருக்கும்.

அதனை திறக்கும் போது வீடியோ ஓட வில்லையே என்று பலர் திகைப்பதுண்டு. டோரன்ட் மூலம் வீடியோக்களை / பெரிய கோப்புகளை தரவிறக்குவது எப்படி? என்று இணைய புதியவர்கள் பின்னூட்டத்திலும், ஈமெயில் மூலமாகவும் நீண்ட நாட்களாகவே கேட்டு வருகிறார்கள். அதனைப் பற்றி மற்ற பதிவர்களின் சுட்டிகளுடன் இந்த இடுகையில் பார்ப்போம்.

டோரன்ட் என்பது உங்களிடம் உள்ள கோப்புகளை உன்லகெங்கும் மற்றவர்களிடையே பகிர்ந்து கொள்ளும் வசதி. சாதாரணமாக தளங்களில் இருந்து கோப்புகளை தரவிறக்கும் போது அந்த கோப்புகளை ஏற்தாவது ஒரு இணைய வழங்கியில் (Web Server) சேமித்து வைத்து இருப்பார்கள். அங்கிருந்து நீங்கள் அவற்றை பெறுவீர்கள்.

ஆனால் டோரன்ட்களில் உலகெங்கும் நீங்கள் தரவிறக்கும் கோப்புகளை கொண்டுள்ள கணினிகள் இணைய இணைப்பில் இருக்கும் போது இணைக்கப் பட்டிருக்கும். நீங்கள் மற்றவர் கணினியில் இருந்து அந்த கோப்பினை தரவிறக்கி கொண்டிருப்பீர்கள். உங்கள் கணினியில் உள்ள அந்த கோப்பின் பகுதிகள் மற்றவர்கள் தரவிறக்க உங்கள் கணினியில் இருந்து அனுப்பப் பட்டு கொண்டிருக்கும்.

இந்த அருமையான தொழிநுட்பம் மூலம் அதிக செலவு பிடிக்கும் இணைய வழங்கியின் தேவை இன்றி பயனர்களே தங்கள் கணினிகளை கோப்பினை மற்றவருக்கு பகிரும் வழங்கி ஆகவும், தரவிறக்கும் பயனராகவும் பயன்படுத்தி கொள்ள முடிகிறது.

டோரன்ட்களின் தொழில்நுட்பம் பற்றி அறிந்து இருந்தாலும் அதனை தமிழில் புரியும்படி விளக்குவது எனக்கு பெரிய சவாலாகவே இருந்தது. பதிவர் சுடுதண்ணி டோரன்ட் குறித்து எளிமையாக அனைவருக்கும் புரியும்படி மூன்று இடுகைகள் எழுதி உள்ளார். டோரன்ட் பற்றி தமிழில் இதை விட சிறப்பாக யாரும் எழுத முடியாது எனும் வண்ணம் அந்த இடுகைகள் உள்ளன. டோரன்ட் பற்றி புரிந்து கொள்ள அந்த இடுகைகளை கண்டிப்பாக படியுங்கள். இடுகை1, இடுகை2, இடுகை3.

படிச்சாச்சா? இந்த இடுகையில் பிரபலமான UTorrent செயலி பயன்படுத்தி டோரன்ட் மூலம் கோப்புகளை தரவிறக்குவது எப்படி? என்று பார்ப்போம். டோரன்ட் மூலம் தரவிறக்க பல்வேறு செயலிகள் உதவினாலும் மிகச் சிறப்பானதாக யுடோரன்ட் செயலி விளங்குகிறது.

இதனை யுடோரன்ட் தளத்திற்கு சென்று தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். நிறுவிய பின் யுடோர்ரன்ட் டாஸ்க் பாரில் வலது மூலையில் வால்யூம் கண்ட்ரோலுக்கு அருகில் அமர்ந்து இருக்கும். இனி டோரன்ட் தளங்களில் நீங்கள் தரவிறக்கும் டோரன்ட் கோப்புகள் (.torrent) யுடோரன்ட் மூலம் திறக்கப்பட்டு தரவிறக்கம் ஆரம்பமாகும். உங்கள் கணியில் ஏற்கனவே தரவிறங்கி உள்ள கோப்புகள் மற்றவர்களுக்கு அனுப்பப் பட்டு (Upload) கொண்டிருக்கும்.

முக்கியமாக உங்கள் தரவிறக்கம் முடிந்த பின்பும் உங்களிடம் தரவிரங்கிய கோப்புகள் மற்றவர்களுக்கு அனுப்பப் பட்டு கொண்டிருக்கும். உங்களிடம் Unlimitted Bandwidth இணைய இணைப்பு இருந்தால் பரவாயில்லை. Limitted Bandwidth இணைய இணைப்பு உள்ளவர்களாக இருந்தால் உங்களை அறியாமலேயே உங்கள் இன்டர்நெட் பில் எகிறி விடலாம். எனவே தரவிறக்கம் முடிந்தவுடன் உங்கள் யூடோர்றேன்ட் செயலியை நிறுத்தி விடுவது அல்லது மூடி விடுவது நல்லது.

ஏற்கனவே பல பதிவர்கள் இது குறித்து தமிழில் எழுதி உள்ளார்கள். அவற்றையும் படிக்கவும். உங்களுக்கு முழுமையான விளக்கம் கிடைக்கும்.

http://pkp.blogspot.com/2008/11/blog-post_11.html
http://velang.blogspot.com/2009/12/u-torrent.html
http://browseall.blogspot.com/2009/11/mininovademonoid.html
http://rvkrishnakumar.blogspot.com/2009/10/blog-post_07.html
http://sagacomputer.blogspot.com/2009/03/2008-torrent.html

வலைப்பதிவில் தகவல் திருட்டு!!!

இன்றைய இணையதள வளர்ச்சியில் இணையதள தகவல் திருட்டு என்பது எளிதாக நடைபெறும் ஒன்றாகிவிட்டது. நம் இணையதளத்திலோ, வலைப்பதிவிலோ நாம் வெளியிட்ட தகவல்களை நம் அனுமதியின்றி எடுத்து தங்களுடைய கருத்துக்களைப் போலப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மேலும் நம் அனுமதியின்றி பல இணையதளங்கள் நம் கட்டுரைகளை எடுத்து வெளியிடுகின்றன.   நம் வருத்தத்தைப் புரிந்து கொண்டு (http://copyscape.com//" ),இத்தளம் செயல்படுகிறது. இத்தளத்துக்குச் சென்று நம் இணையதள முகவரியையோ, வலைப்பதிவு முகவரியையோ அளித்தால் சில நொடிகளில் நம் பதிவு எந்தெந்த வலைப்பதிவுகளில், இணையதளங்களில் எடுத்தாளப்பட்டுள்ளது என்ற தகவலை தருகிறது.

நன்றி  .............
முனைவர்.இரா.குணசீலன்
தமிழ் விரிவுரையாளர்.
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு
நாமக்கல் மாவட்டம்
தமிழ் நாடு, இந்தியா.

w3தமிழ் எழுதி