இன்றைய இணையதள வளர்ச்சியில் இணையதள தகவல் திருட்டு என்பது எளிதாக நடைபெறும் ஒன்றாகிவிட்டது. நம் இணையதளத்திலோ, வலைப்பதிவிலோ நாம் வெளியிட்ட தகவல்களை நம் அனுமதியின்றி எடுத்து தங்களுடைய கருத்துக்களைப் போலப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மேலும் நம் அனுமதியின்றி பல இணையதளங்கள் நம் கட்டுரைகளை எடுத்து வெளியிடுகின்றன. நம் வருத்தத்தைப் புரிந்து கொண்டு (http://copyscape.com//" ),இத்தளம் செயல்படுகிறது. இத்தளத்துக்குச் சென்று நம் இணையதள முகவரியையோ, வலைப்பதிவு முகவரியையோ அளித்தால் சில நொடிகளில் நம் பதிவு எந்தெந்த வலைப்பதிவுகளில், இணையதளங்களில் எடுத்தாளப்பட்டுள்ளது என்ற தகவலை தருகிறது.
நன்றி .............
முனைவர்.இரா.குணசீலன்
தமிழ் விரிவுரையாளர்.
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு
நாமக்கல் மாவட்டம்
தமிழ் நாடு, இந்தியா.
No comments:
Post a Comment